தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய கடல்சார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

இந்திய கடல்சார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

இந்திய கடல்சார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்


UPDATED : மார் 28, 2013 12:00 AM

ADDED : மார் 28, 2013 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2013 12:00 AM ADDED : மார் 28, 2013 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழத்தின் புதிய துணைவேந்தராக, கேப்டன் முகேஷ் பவேஜா பொறுப்பேற்றார்.

கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் அமைந்துள்ளது, மத்திய அரசின், இந்திய கடல்சார் பல்கலைக் கழகம். இதன், முதல் துணைவேந்தராக, விஜயன் நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. இதைடுத்து, ரகுராம் பொறுப்பேற்றார். அவரும் சமீபத்தில் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கேப்டன் முகேஷ் பவேஜா, புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ளார். இவர், 1975ம் ஆண்டு முதல், 1984ம் ஆண்டு வரை இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உயரதிகாரியாக பணியாற்றினார். பின், சரக்கு கப்பலின் கேப்டனாக பணிபுரிந்தார். தொடர்ந்து பல நிறுவனங்களின் உயரதிகாரியாகப் பணியாற்றி உள்ளார்.

கடந்த, 2011ம் ஆண்டு, துணைவேந்தர் விஜயன் மீது, குற்றச்சாட்டு எழுந்த காலத்தில், இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தார். தற்போது, புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us