தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"கால்நடை மருத்துவப் படிப்பு படித்தால் உடனடி வேலைவாய்ப்பு"

"கால்நடை மருத்துவப் படிப்பு படித்தால் உடனடி வேலைவாய்ப்பு"

"கால்நடை மருத்துவப் படிப்பு படித்தால் உடனடி வேலைவாய்ப்பு"


UPDATED : ஏப் 02, 2013 12:00 AM

ADDED : ஏப் 02, 2013 08:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2013 12:00 AM ADDED : ஏப் 02, 2013 08:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் நடந்த, "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில், பி.வி.எஸ்சி., பாடப்பிரிவில், 260 இடங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகின்றன. இப்பாடப்பிரிவில், ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும்.

நான்கரை ஆண்டுகள் பாடப் பிரிவுகளிலும், ஆறு மாதங்கள் வெளியில் அழைத்துச் சென்று, களப் பயிற்சியும் அளிக்கப்படும்.இப்பாடப்பிரிவில் சேர, ரூ.31,000  மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அறிவியல் சம்பந்தமான பாடங்களில், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.

கடந்த 2010 வரை, இப்பாடப்பிரிவு முடித்த அனைவரும் சிறந்த வேலையில் சேர்ந்துள்ளனர். இந்த பாடப்பிரிவு படித்தவர்களுக்கு வங்கி, இன்சூரன்ஸ், மிலிடரி சர்வீஸ், கால்நடை கல்லூரி ஆகியவற்றில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்தாண்டு, கால்நடைத்துறையில், காலியாக உள்ள, 934 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பி.வி.எஸ்சி., முடித்தவர்களுக்கு, இந்த வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. "கேம்பஸ் இன்டர்வியூ" மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பி.வி.எஸ்சி., பாடப்பிரிவில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இந்த மாதம் முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு சந்திரகாசன் பேசினார்.
===

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us