மாணவர்களுக்கு நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் வழங்கல்
மாணவர்களுக்கு நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் வழங்கல்
UPDATED : ஏப் 10, 2013 12:00 AM
ADDED : ஏப் 10, 2013 11:02 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கு, அவர்கள் கல்வி பயிலும் கல்லூரிகளுக்கே நேரில் சென்று, ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கே நேரில் சென்று, ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை, அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) குவலயநாதன் துவக்கி வைத்தார்.
அதன்படி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி இன்ஜினியரிங் கல்லூரி, மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று, அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு எல்.எல்.ஆர்., உரிம விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், 18 வயது முடிந்த மாணவர்கள் தங்களது பிறந்த தேதிக்கான சான்று, முகவரி சான்று இணைத்து, சம்பந்தப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், எல்.எல்.ஆர்., உரிமம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கே சென்று வழங்கப்படும்.
இதன் மூலம் ஏற்கனவே வாகனம் ஓட்ட தெரிந்த மாணவர்கள், தக்க உரிமம் பெற்று ஓட்டவும், மற்ற மாணவர்கள் உரிய பயிற்சி பெற்று டிரைவிங் லைசென்ஸ் பெறவும், இந்த நேரடி திட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
