ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: மதுரையில் இலவச பயிற்சி
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: மதுரையில் இலவச பயிற்சி
UPDATED : ஏப் 10, 2013 12:00 AM
ADDED : ஏப் 10, 2013 11:06 AM
அ நிறம் | அளவு
மதுரை: ராணுவத்தில் சேர விரும்புவோருக்கான இலவச பயிற்சி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், இன்று (ஏப்.,10) முதல் ஏப்.,25 வரை நடக்கிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவிப்பு: ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம், மே 6 முதல் 12 வரை நடக்கிறது. மதுரையில் இருந்து ராணுவத்திற்கு அதிகளவு விண்ணப்பதாரர்களை அனுப்ப வேண்டும், என்ற நோக்கத்தில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலந்து கொள்ள விரும்புவோர், இன்று காலை, ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு நேரில் வந்து, பெயரை பதிவு செய்ய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை 94421 64009 / 99403 41501 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
