தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிவோர்களுக்கு சம்பளம்: ஐகோர்ட் கிளை

அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிவோர்களுக்கு சம்பளம்: ஐகோர்ட் கிளை

அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிவோர்களுக்கு சம்பளம்: ஐகோர்ட் கிளை


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிவோருக்கு பாங்கில் அவர்களது பெயர்களில் இரு மாத சம்பளத்தை டெபாசிட் செய்ய கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிர்வகிப்பதில் சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆஷீர், முதல்வராக இருந்த சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. சின்ராஜ் ஜோசப் கல்லூரி செயலாளராக தொடர கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிஷப் ஒரு ரிட் மனு செய்தார்.
ஆட்சி மன்ற குழுவால் முதல்வர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் செல்வக்குமாரும், தனது நியமனத்திற்கு எதிராக கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஒரு ரிட் மனு செய்தார். சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமார், ‘தன்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய ஆட்சி மன்ற குழு தீர்மானத்தை எதிர்த்து’ ரிட் மனு செய்தார்.
இம்மனுக்கள் நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் ஒரு சேர விசாரணைக்கு வந்தன. பிஷப் சார்பில் வக்கீல் கிருஷ்ணவேணியும், சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமார் சார்பில் ஐசக் மோகன்லாலும், அரசு தரப்பில் அனிதாவும் ஆஜராயினர். இணை இயக்குநரும் ஆஜரானார். அமெரிக்கன் கல்லூரி  ஊழியர்கள் 192 பேர் தங்களையும் வழக்கில் சேர்க்க கோரி மனு செய்தனர்.
கல்லூரியில் பணிபுரிவோருக்கு செப்.,மற்றும் அக்., மாத சம்பளம் வழங்காதது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பிறகு பாங்கில் சம்பளத்தை டெபாசிட் செய்ய இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். ரிட் மனுக்கள் மீதான விசாரணையை நவ., 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us