தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலையில் 251 பேருக்கு பட்டம்

மதுரை காமராஜ் பல்கலையில் 251 பேருக்கு பட்டம்

மதுரை காமராஜ் பல்கலையில் 251 பேருக்கு பட்டம்


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துணைவேந்தர் ஆர்.கற்பககுமாரவேல் துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினரான பல்கலை., மானியக்குழுவின் துணைத்தலைவர் மூல்சந்த் சர்மா பேசுகையில்,‘நீங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சமுதாயத்துக்கு அளிக்க வேண்டும். உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், பகைவர்களுக்குக் கூட நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்.
சமூகம் பற்றிய சிந்தனை இருந்தால்தான் குறுகிய ஜாதி, மத எண்ணங்கள் நீங்கும். தற்போது உலகமயமாதலின் உந்துசக்தியாக பேராசை, சுலபமாக பணம் ஈட்டுதல் போன்றவை உள்ளது. இந்த அடிப்படையில் வங்கிகள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டன. இதனால் பல பெரிய வங்கிகளே திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியா உட்பட பலநாடுகளை பாதித்துள்ளது. ராணிப்பேட்டை, மொராதாபாத், திருப்பூர் என பலநகரங்களில் பலர் வேலையிழந்துள்ளனர்.
அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் அவர்களால் சமாளிக்க முடியும். ஆனால் இந்தியா, மங்கோலியா, காங்கோ போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கும். உலகமயமாதல், தாரளமயமாதல் என எந்த நிலையிலும் மனிதர்களை பாதிக்காதவாறு சம்பாதித்தால்தான் அதன் பலன் அனைவரையும் சென்றடையும்’ என்றார்.
பதிவாளர் சிங்காரம், கலெக்டர் சீதாராமன், கமிஷனர் நந்தபாலன், தேர்வாணையர் சண்முகையா, கூடுதல் தேர்வாணையர் தெய்வமணி, சிண்டிகேட் உறுப்பினர்கள் அழகப்பன், ஆதப்பன்,பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us