டி.வி.ஆர்., சிறப்பிதழ் வடிவமைப்பு போட்டி: பாத்திமா கல்லூரிக்கு பரிசு
டி.வி.ஆர்., சிறப்பிதழ் வடிவமைப்பு போட்டி: பாத்திமா கல்லூரிக்கு பரிசு
UPDATED : நவ 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) நூற்றாண்டு சிறப்பிதழ் வடிவமைப்பு போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற மதுரை பாத்திமா கல்லூரிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
பத்திரிகை உலகில் பல புதுமைகளை புகுத்தியவர் டி.வி.ஆர். நாளிதழ் மூலம் தமிழ் சமுதாய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய அவரது நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்காக ‘சிறப்பிதழ் வடிவமைக்கும் போட்டி’ அறிவிக்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரிகள் கலந்து கொண்டன. இவற்றில் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல் பரிசையும், மதுரை பாத்திமா கல்லூரி ஆறுதல் பரிசையும் பெற்றன.
நவ. 12ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பாத்திமா கல்லூரிக்கு பரிசு வழங்கப்பட்டது. தினமலர் சார்பில் கல்லூரிக்கு ‘டி.வி.ஆர்., கோப்பை’ மற்றும் பரிசு ரூ.5,000 வழங்கப்பட்டது. முதல்வர் பாத்திமா கோப்பையை பெற்றுக்கொண்டார்.
இதழ் தயாரிப்பு ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற தமிழ் துறை விரிவுரையாளர் அருள் மைக்கேல் செல்வி, மாணவிகள் விஜயப்பிரியா, உமாமகேஸ்வரி, திவ்யா, நாகராணி ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்துறை தலைவர் சி.எஸ்.விசாலாட்சி கலந்து கொண்டார்.
