தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: நெல்லை பல்கலை புது ஒப்பந்தம்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: நெல்லை பல்கலை புது ஒப்பந்தம்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: நெல்லை பல்கலை புது ஒப்பந்தம்


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருநெல்வேலி:
ஐதராபாத் ஜீவன் மேலாண்மை நிறுவனத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நெல்லை பல்கலையின் தொலைநிலைக்கல்வி திட்டத்தின்கீழ் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி, சுற்றுலா ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட்டில் நடக்க உள்ளது.
இதற்காக ஐதராபாத்தை சேர்ந்த ஜீவன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாடத்திட்ட தயாரிப்பு, ஆசிரியர்கள் மூலம் பயிற்சி ஆகியவற்றை அந்நிறுவனம் மேற்கொள்ளும். தேர்வு நடத்திய பட்டங்களை பல்கலை வழங்கும்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண கிஷோர், பல்கலை பதிவாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் துணைவேந்தர் சபாபதிமோகன், தேர்வாணையர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us