தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மற்றவர்களை வெற்றிபெற செய்தால் நீங்கள் வெற்றி பெறலாம்’

‘மற்றவர்களை வெற்றிபெற செய்தால் நீங்கள் வெற்றி பெறலாம்’

‘மற்றவர்களை வெற்றிபெற செய்தால் நீங்கள் வெற்றி பெறலாம்’


UPDATED : நவ 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் அவினாசிலிங்கத்தின் 17வது  நினைவு சொற்பொழிவு, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடந்தது.
இதில், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான கவிதாசன் பேசியதாவது:
இந்த உலகில் காலத்தைப் போக்க யாரும் வரவில்லை. எல்லாரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டு இருக்கிறோம். காலத்தின் பாதையிலே போக வரவில்லை. காலத்துடன் நிலைத்து நிற்கவே வந்திருக்கிறோம்.
வாழ்க்கையை ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். நம்மை நோக்கி வரும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி பெற மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில் மற்றவர்களை வெற்றியடைச் செய்ய வேண்டும். மற்றவர்களை வெற்றியடையச் செய்யும் மனிதனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
நாட்டிலே இருக்கும் பிரச்னைக்கு காரணம் வீட்டில் இருக்கும் பிரச்னைகள்தான். மனதை அமைதிப்படுத்தினால், பிரச்னையை கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற முடியும். இதற்காக தினமும் யோகாசனம், பிரார்த்தனை செய்வது அவசியம். சத்தியத்திற்காக எதையும் இழக்கலாம். ஆனால், சத்தியத்தை ஒரு போதும் இழக்க கூடாது.
இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகளை தள்ளிப்போடுவது,  தாழ்வுப் மனப்பான்மை, பொறாமை குணம், சோம்பேறித்தனம் உள்ளிட்டவைகளை தியாகம் செய்தால் வாழ்வில் முன்னேற முடியும்.  தண்ணீரைத் தள்ளும் போது தான் படகு முன்நோக்கி செல்லும். அதுபோல், வாழ்வில் தேவையில்லாத விஷயங்களை தள்ளினால் தான் மனதில் நல்ல எண்ணம் பிறக்கும்.
ஒவ்வொருவரும் தனக்கென ஒரு லட்சியத்தை உருவாக்கி, அதை அடைய அயராது உழைக்க வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகு போன்றது. இவ்வாறு கவிதாசன் பேசினார். இந்நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் சண்முகானந்தம், துணைவேந்தர் சரோஜா பிரபாகரன் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us