தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிவியை தவிர்த்தால் சாதிக்கலாம்...ஜெயிக்க போகும் மாணவர்களின் டிப்ஸ்

டிவியை தவிர்த்தால் சாதிக்கலாம்...ஜெயிக்க போகும் மாணவர்களின் டிப்ஸ்

டிவியை தவிர்த்தால் சாதிக்கலாம்...ஜெயிக்க போகும் மாணவர்களின் டிப்ஸ்


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு:


என்.காளீஸ்வரி, காரைக்குடி மு.வி.,அரசு மேல்நிலைப்பள்ளி:
கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பேன். பள்ளி, டியூசன் நேரங்கள் தவிர்த்து தினமும் காலை 7 மணி முதல் 9 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை படிப்பேன். ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற வேண்டும் என்பது லட்சியம்.
கிருத்திகா, கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி: அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறேன். மருத்துவ துறையில் படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன். எனது லட்சியத்திற்கு தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் உறுதுணையாக உள்ளது.
பவானி மணியம்மை, காரைக்குடி ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி: உயிரியல் பாடத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அடிக்கடி எழுதி பார்ப்பதால் எளிதில் விடைகள் மனதில் பதிகிறது.
நத்தர் உசேன், புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி:
அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி, இரவு 9 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். அன்றைய பாடத்தை அன்றைக்கே படித்து விடுவேன். எனது தந்தை இறந்தவிட்ட போதும், தாய் எல்லா விதத்திலும் உறுதுணையாக உள்ளார். அறிவியலில் ஆர்வமுடன் படிப்பேன். டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் .
மணிவண்ணன், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளி:
கணிதத்தை விருப்பத்துடன் படிப்பேன். அதிகாலை 4 மணி முதல் 6 மணி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். பழைய வினாத்தாட்களை சேகரித்து விடையளித்து வருகிறேன். பாடத்தை அன்றைக்கே படித்து, கேள்விகளுக்கு விடை எழுதி பழகுவேன்.  டாக்டராவது லட்சியம்.
பிளஸ் 2 மாணவர்கள்:
காயத்ரி, காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளி:
இயற்பியல், வேதியியல்,கணித பாடத்தை விரும்பி படிப்பேன். நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து படித்து வருகிறேன். விஞ்ஞானியாக  வேண்டும் என்பது லட்சியம்.
மோனிகா காத்ரீன், தேவகோட்டை துவயமரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளி:
எனக்கு பிடித்த பாடம் கணிதம், இயற்பியல். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பேன். பெற்றோர் உதவியால் பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். டிவி பார்ப்பதே கிடையாது.
மீனாட்சி, காரைக்குடி மு.வி.,அரசு மேல் நிலைப்பள்ளி:
அன்றைய பாடத்தை அன்றே படித்து கேள்விகளை தயார் செய்து எழுதி பார்ப்போம். வேதியியல், இயற்பியல் பாடம் பிடிக்கும். டிவி பார்ப்பதை தவிர்த்தால் அனைத்து மாணவர்களும் சாதிக்கலாம்.
அன்புச்செல்வன், திருப்புத்துவர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு மேல் நிலைப்பள்ளி:
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதில் ஆர்வம் அதிகம். படிக்கும் போது எந்தவித சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் நிதானமாக படிப்பேன்
திருஞானம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளி:
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை ஆர்வமுடன் படிப்பேன். படிப்பு ஒன்று தான் நமது லட்சியம் என்ற குறிக்கோளோடு படித்து வருகிறேன். இந்த லட்சியத்தை அடைய இன்னும் உழைக்கவேண்டும் என்பதற்காக கேள்விக்கான விடைகளை எழுதி பயிற்சி பெறுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us