UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:21 AM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. இப்படிப்பிற்கு இன்றுடன் (30ம் தேதி) விண்ணப்ப வினியோகம் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை அடுத்து, ஆக., 16ம் தேதி வரை, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்புகளில் உள்ள, 1,262 இடங்களுக்கு, 4,300 விண்ணப்பங்கள்; பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்கள்; எம்.எல்., சட்டப் படிப்பில் உள்ள, 160 இடங்களுக்கு, 118 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.இவ்வாறு சங்கர் தெரிவித்தார்.
