தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆயுர்வேதம் படிக்க விரும்பும் அமெரிக்க இந்திய மாணவர்கள்

ஆயுர்வேதம் படிக்க விரும்பும் அமெரிக்க இந்திய மாணவர்கள்

ஆயுர்வேதம் படிக்க விரும்பும் அமெரிக்க இந்திய மாணவர்கள்


UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM

ADDED : ஜூலை 30, 2013 08:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM ADDED : ஜூலை 30, 2013 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவம் கற்பதற்காக, இந்தியா வர விரும்புகின்றனர்.

அமெரிக்காவில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய மருத்துவ முறையான, ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் அதிகம் இருப்பதாகவும், அமெரிக்க மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், அமெரிக்க மருத்துவ மாணவர்களிடையே, இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை கற்பதில், ஆர்வம் அதிகரித்துள்ளது. வாரணாசியை பூர்வீகமாகக் கொண்ட பெண், பாஸ்வதி பட்டாச்சார்யா, அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருகிறார்.

ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை அறிந்த அவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான படிப்பை பயில்வதற்காக, இந்தியா வந்துள்ளார். அதில், "ஓஜஸ்&' முறையை கற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு, ஓஜஸ் முறையில் சிறந்த தீர்வு இருப்பதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு மருத்துவ மாணவர்களும், ஆயுர்வேதம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us