ஒப்பந்த ஊழியர்களைக் குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு!
ஒப்பந்த ஊழியர்களைக் குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு!
UPDATED : நவ 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்னால், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஊழியர்களைக் குறைப்பது பற்றி திட்டமிட்டு வருகிறோம் என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேன் பென்னர் தெரிவித்துள்ளார். ஆனால், ஒப்பந்த ஊழியர்கள் எத்தனைபேர் நீக்கப்படுவார்கள் என்பதை கூகுள் நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
கூகுள் நிறுவனத்தில் 20,123 பேர் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் குகூள் நிறுவனமும் இந்தப் பட்டியலில் சேருகிறது.
