ஆசிரியர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்: சிபிசிஐடி., டிஐஜி.,
ஆசிரியர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்: சிபிசிஐடி., டிஐஜி.,
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 11:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சிபிசிஐடி டிஐஜி., ஜான் நிக்கல்சன் பேசுகையில்,
"சேவையாற்றும் மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும். அன்பு இருந்தால் தான் நாம் மற்றவருக்கு சேவை செய்ய முடியும். பிறரை நேசிக்காதவன் இறைவனை அடைய முடியாது. நாட்டில் யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். சமுதாயத்திற்கு சேவை முக்கியம். அனைத்து ஆசிரியர்களும் மற்றவர்களுக்கு சேவை செய்து அதன் மூலம் சந்தோஷம் அடைய வேண்டும்" என்றார்.
கருத்தரங்கில் பள்ளிகளில் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகள், அமைப்பு விதிகள், நிதி மற்றும் கணக்கு பராமரிப்பு, புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.