தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிறைவுபெற்றது பொறியியல் கலந்தாய்வு - 79,303 இடங்கள் நிரம்பவில்லை!

நிறைவுபெற்றது பொறியியல் கலந்தாய்வு - 79,303 இடங்கள் நிரம்பவில்லை!

நிறைவுபெற்றது பொறியியல் கலந்தாய்வு - 79,303 இடங்கள் நிரம்பவில்லை!


UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM

ADDED : ஜூன் 12, 2014 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM ADDED : ஜூன் 12, 2014 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., உள்ளிட்ட அனைத்துப் பிரிவு இடங்களும், ஒன்றுவிடாமல் நிரம்பி விட்டன. பல்கலைக்கழக கல்லூரிகளில் 646 இடங்கள் காலியாக உள்ளன.

அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.

CECRI, CIPET போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களில், எந்த இடமும் காலியாக இல்லை. அனைத்தும் நிரம்பி விட்டன. அதேசமயம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், மொத்தம் 78,655 இடங்கள் காலியாக உள்ளன.

காலியிடங்களில் பி.ஆர்க்., படிப்பிற்கான இடங்கள் மட்டும் 295. பி.ஆர்க்., படிப்பை வழங்கும் மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 40.

இறுதியாக, அனைத்து படிப்புகளின் இடங்களையும் சேர்த்து, இந்த கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த பொறியியல் காலியிடங்களின் எண்ணிக்கை 79,303. மொத்தம் 570 கல்வி நிறுவனங்களில் இந்த காலியிடங்கள் உள்ளன. ஒட்டுமொத்த ஒதுக்கீடு பெற்றவர்கள் 1,27,838 பேர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us