UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 04:40 PM
மனித வாழ்க்கையை எளிதாக்க உதவுவதாக இந்தத் துறையின் ஆய்வுகள் அமைகின்றன. மிகச் சில கல்லூரிகளில் மட்டுமே இந்தப் படிப்பானது பட்டப்படிப்பாகத் தரப்படுகிறது. பொதுவாக அடிப்படையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடிப்பவர்கள் சிறப்புப் படிப்பாக இதை பட்டமேற்படிப்பில் படிக்கின்றனர்.
இத் துறையில் பட்ட மேற்படிப்பைத் தரும் நிறுவனங்களில் ஐதராபாத் ஐ.ஐ.டி., ஒஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றைக் கூறலாம். மேலும் பல ஐ.ஐ.டிக்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பிட்ஸ், பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இது தொடர்பான படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ரொபாடிக்ஸ் டிசைன், டெஸ்டிங், புரொகிராமிங் என பல்வேறு பணிப் பிரிவுகள் இதில் உள்ளன.