"மாணவர்கள் ஆய்வுப் பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும்"
"மாணவர்கள் ஆய்வுப் பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும்"
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 11:16 AM
சிவகாசி: "மணவர்கள் ஆய்வு பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும்,"" என அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை தொழில் நுட்ப கல்லூரியில் மேலாண்மை முதுநிலை பட்ட ஆய்வு படிப்பு வகுப்பு துவக்க விழா நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் மாணிக்க வாசகம் பேசியதாவது:
"மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கு தொழில் சம்மந்தப்பட்ட பிரச்னைகளை தலைப்புகளாக எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவில் கல்வி நிலையம், தொழில் நிறுவனம் பிணைப்பை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத விஷயங்களையும், பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வில் நேர்மையை செயல்படுத்த உறுதி கொள்ள வேண்டும். மாணவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, எண்ணத்தில் தெளிவு, அறிவார்ந்த கண்ணோட்டம் இருந்தால், தரமான ஆய்வாக இருக்கும். செய்து முடித்த ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமூக நலன் கருதி வெளியிட வேண்டும்" என்றார்.