தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள் தொகைக் கல்வி: நடித்தல் போட்டிக்கு அழைப்பு

மக்கள் தொகைக் கல்வி: நடித்தல் போட்டிக்கு அழைப்பு

மக்கள் தொகைக் கல்வி: நடித்தல் போட்டிக்கு அழைப்பு


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: மக்கள் தொகை கல்வி தொடர்பான நடித்தல் போட்டிக்கு தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி நடத்தப்படுகிறது.

பள்ளிகள் அளவிலான போட்டிகள் நேற்று அனைத்து பகுதிகளிலும் நடந்தது. இதில் முதலிடம் பெற்ற குழுவினருக்கு பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் நடக்கிறது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

இதில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us