தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்குவாரியில் பணிபுரிந்த ஒடிசா மாநில குழந்தைகள் மீட்பு

கல்குவாரியில் பணிபுரிந்த ஒடிசா மாநில குழந்தைகள் மீட்பு

கல்குவாரியில் பணிபுரிந்த ஒடிசா மாநில குழந்தைகள் மீட்பு


UPDATED : செப் 02, 2013 12:00 AM

ADDED : செப் 02, 2013 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2013 12:00 AM ADDED : செப் 02, 2013 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கல் குவாரியில் பணிபுரிந்த, ஒடிசா மாநில குழந்தைகள் மீட்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணைப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆலாம்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை யசோதா, பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிந்த, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டு, வடக்கு வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆய்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட குழந்தைகள், அங்குள்ள, தனியார் கல்குவாரியில் பணிபுரிவது தெரியவந்தது. உடனே பெற்றோர்களுடன் பேச்சு நடத்தி, குழந்தைகளை மீட்டு, ஆலாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தனர்.தலைமை ஆசிரியை யசோதா கூறியதாவது:

பள்ளியில், 15க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். ஒரு வாரம் மட்டுமே, பள்ளிக்கு வந்தனர். எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் கல்குவாரி பகுதிக்கு சென்று பார்த்தபோது, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதால், 3 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் தயங்குவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கல்குவாரிக்கு அருகில், இணைப்பு மையம் அமைத்து, குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தற்போது, ஆறு குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., வட்டாரவள மேற்பார்வையாளர் கோமதி கூறுகையில், "இணைப்பு மையத்தில் சேர்க்கப்பட்ட, 15 குழந்தைகளில், தற்போது, ஆறு குழந்தைகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ளவர்கள், வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டனர்" என்றார். மீதமுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, தனியார் பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us