10ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
10ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
UPDATED : செப் 02, 2013 12:00 AM
ADDED : செப் 02, 2013 08:00 AM
சின்னமனூர்:சின்னமனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையை சேர்ந்த காளி என்பவர் மகன் முத்து மாரியப்பன், 37. இவர் டாஸ்மாக் விற்பனையாளர். இவருக்கு, உத்தமபாளையம் ஆர்.சி.,தெருவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியை, பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயம் செய்துள்ளனர்.
நேற்று நடக்க இருந்த திருமணம் குறித்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் யசோதாவிற்கு புகார் சென்றது. நேற்று முன்தினம் உத்தமபாளையம் தாசில்தார் தனலிங்கம் இரண்டு தரப்பிலும் விசாரித்து ஆலோசனை வழங்கினார். அதன் பின்னரும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. சமூகநலத்துறை அதிகாரிகள் குழுவினர் நேரடியாக சென்று, பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
