தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொல்லியல்: பண்ருட்டி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

தொல்லியல்: பண்ருட்டி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

தொல்லியல்: பண்ருட்டி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு


UPDATED : செப் 23, 2013 12:00 AM

ADDED : செப் 23, 2013 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2013 12:00 AM ADDED : செப் 23, 2013 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில் 3,000 ஆண்டுகள் பழமையான, முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவரது நிலத்தில், மீன் வளர்ப்பு திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பழமை வாய்ந்த 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்தன. சமூக ஆர்வலர் ராமமூர்த்தி, பண்ருட்டி தொல்பொருள் ஆய்வாளர் தமிழரசனுக்கு தகவல் தெரிவித்தார்.

தாழியை ஆய்வுசெய்த தமிழரசன் கூறியதாவது: பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கிடைத்து வருகின்றன. தற்போது கிடைத்துள்ள தாழிகள் 3,000ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இப்பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மக்கள் வசித்து வந்ததாக அறிய முடிகிறது. இந்த தாழிகள் மேல் விளிம்புகளுடன் கூடிய மூடிகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us