தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் மோதல் விசாரணை கமிஷன் காலக்கெடு நீட்டிப்பு?

மாணவர்கள் மோதல் விசாரணை கமிஷன் காலக்கெடு நீட்டிப்பு?

மாணவர்கள் மோதல் விசாரணை கமிஷன் காலக்கெடு நீட்டிப்பு?


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன் மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பது குறித்து கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. டிச. 8ம் தேதிக்குள் கமிஷன் முன் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை 31ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி, கமிஷனிடம் அசந்தாமணி என்பவர் மனு தாக்கல் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி சந்துரு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: விசாரணை கமிஷன் சட்டப்படி, அதன் நடைமுறைகளை வகுத்துக் கொள்ள கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. கால அவகாசம் நீட்டிக்கக் கோரி மனுதாரர் அளித்த மனுவை கமிஷன் தான் கவனிக்க வேண்டும். இதுகுறித்து எங்கள் அதிகாரவரம்பை செயல்படுத்த விரும்பவில்லை. சட்டப்படி கமிஷன் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது.
விடுதியில் உள்ள புத்தகங்கள், குறிப்புகள், உடைமைகளை எடுக்க அனுமதிக்கக் கோரி, மாணவர் கனகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
விடுதியில் புத்தகங்கள், குறிப்புகள், ஹால் டிக்கெட்டுகள் இருப்பதால், தேர்வு எழுத முடியாது என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவர்களின் கோரிக்கையை கல்லூரி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். தங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும்.
டிச. 9ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டும். காவலில் இல்லாத மாணவர்களுக்குத் தான் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us