தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துபாயில் அண்ணா பல்கலை. வளாகம் தொடங்கத் திட்டம்!

துபாயில் அண்ணா பல்கலை. வளாகம் தொடங்கத் திட்டம்!

துபாயில் அண்ணா பல்கலை. வளாகம் தொடங்கத் திட்டம்!


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துபாயில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி நிலையத்தின் முதல் வளாகமாக அது இருக்கும்.


துபாயில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் அமைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அரசு தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து அண்ணா  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மூத்த பேராசிரியர்கள் அங்கு சென்று, புதிய வளாகம் அமைப்பதற்கான சாத்தியங்களை  அறிந்து வந்துள்ளனர். அவர்கள் தந்துள்ள முதல் கட்ட அறிக்கையை பல்கலைக்கழகத்தின் பரிசீலனையில் உள்ளது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக துபாயில் நாலெட்ஜ் வில்லேஜ் உருவாக்கப்பட்டது. அங்கு மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கன் காலேஜ் ஆப் எமிரேட்ஸ், ஈரோப்பியன் யுனிவர்சிட்டி காலேஜ், தி பிரிட்டிஷ் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆப் உல்லாங் ஆகிய பல்கலைக்கழகங்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஆகிய இந்தியக் கல்வி நிறுவனங்களும் துபாயில் வளாகம் அமைத்துச் செயல்பட்டு வருகின்றன.


அண்ணா பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளை நடத்தி வருகிறது. இந்தற்காக மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜாத், டில்லி ஆகிய இடங்களில் படிப்பு மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். சிங்கப்பூரிலும் படிப்பு மையம் அமைப்பதற்கான கோரிக்கை வந்துள்ளது என்றும், வெளிநாடுகளில் படிப்பு மையங்களை அமைப்பதற்கு முன்னதாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் படிப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us