செங்கல்பட்டு நர்சிங் பயிற்சி பள்ளியை மாற்ற எதிர்ப்பு
செங்கல்பட்டு நர்சிங் பயிற்சி பள்ளியை மாற்ற எதிர்ப்பு
UPDATED : டிச 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு நர்சிங் பயிற்சிப் பள்ளி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 400க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்படும்போது பயிற்சிப் பள்ளி மாணவிகளை சேவையில் ஈடுபடுத்துகின்றனர்.
தற்போது நர்சிங் கல்லூரியைத் தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதால், பயிற்சிப் பள்ளியை சென்னைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சிப்பள்ளியை செங்கல்பட்டிலிருந்து மாற்றக் கூடாது என்று செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர், சுகாதார செயலர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
