தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைவருக்கும் கட்டாய இலவச தொடக்கக் கல்வி: மசோதா தாக்கல்

அனைவருக்கும் கட்டாய இலவச தொடக்கக் கல்வி: மசோதா தாக்கல்

அனைவருக்கும் கட்டாய இலவச தொடக்கக் கல்வி: மசோதா தாக்கல்


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வியை வழங்க வகை செய்யும் இந்த மசோதாவை மனித வளத்துறை இணை அமைச்சர் எம்.ஏ.ஏ. பாத்மி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் முதல் வகுப்பில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதையும் இந்த மசோதா தடை செய்கிறது. பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர்களுக்கும்
மாணவர்களுக்கும் இன்டர்வியூ நடத்தவும் இந்த மசோதா தடை விதித்துள்ளது.
வயது சான்றிதழ் இன்மையிலால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கக்கூடாது. தொடக்கப் பள்ளி முடியும் வரை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் தனியே டியூஷன் எடுக்கவும் பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்தும் வகையில் தண்டனை அளிக்கவும் தடைவிதிக்கும் விதிகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு நீங்கலாக, கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கும் இந்த மசோதா தடை செய்கிறது. தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டியது ஆசிரியர்களது கடமையாகும்.


விதிமுறைகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விதிமுறைகளை மீறி நடத்தப்படும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிமுறைகள் சரிவர செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் புகார்களைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையமும் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் கண்காணிப்பதற்கும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள 20 கோடிக் குழந்தைகள் பயன் பெறுவர். இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவாகும். தேவையான நிதி அளித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us