UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 09:33 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில், விடுதி வார்டன்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகள் சவுந்தர்யா, 15. இவர், முருகத்தூரன்பட்டி தனியார் காப்பகத்தில் தங்கி, சிலுக்குவார்பட்டி ஆர்.சி., உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவ., 12 ல், வயிறு வலிப்பதாக கூறிய அவரை நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாணவியின் உடல், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 3ம் நாளான நேற்றும் இப்போராட்டம் தொடர்ந்தது. பேச்சுவார்த்தைக்கு பின் மாணவியின் தந்தையிடம் புகாரை பெற்று விடுதி வார்டன்கள் இந்திரா, 28, செல்வி, 25, காவலாளி பாண்டி, 45 ஆகியோரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
