தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை இல்லையா? விவசாயம் செய்யுங்கள்: ஜப்பான் அரசு

வேலை இல்லையா? விவசாயம் செய்யுங்கள்: ஜப்பான் அரசு

வேலை இல்லையா? விவசாயம் செய்யுங்கள்: ஜப்பான் அரசு


UPDATED : ஜன 18, 2009 12:00 AM

ADDED : ஜன 18, 2009 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2009 12:00 AM ADDED : ஜன 18, 2009 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டோக்கியோ: வேலையில்லாத இளைஞர்களுக்கு விவசாயம், மீன்பிடித் தொழில் குறித்து பயிற்சி அளிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் அவசர பொருளாதார சலுகை திட்டங்களை ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். வேலையில்லாதவர்களை மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது.
ஜப்பான் விவசாய அமைச்சக அதிகாரி ஹிசாவோ முனெடா கூறியதாவது:
விவசாயம், மீன்பிடித் தொழிலுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்களுக்கு விவசாயம், மீன்பிடித் தொழில் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயம், மீன்பிடித் தொழில் நடக்கும் கிராமப்புறங்களுக்கு இளைஞர்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுவர். விவசாயப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை ஆகியவை குறித்து அவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். முதல்கட்டமாக பத்து நாட்கள் தங்கியிருந்து இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்வர்.
வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஓராண்டு காலம் கிராமங்களிலேயே தங்கியிருந்து விவசாயம் தொடர்பான பணிகளில் அவர்கள் பயிற்சி பெறுவர். படிப்படியாக இவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஹிசாவோ தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us