தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்
UPDATED : ஜன 24, 2009 12:00 AM
ADDED : ஜன 24, 2009 02:38 PM
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, பேராசிரியர் கல்யாணி ஆனி நியமிக்கப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்த பழனிச்சாமி, டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை நியமிக்க சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இன்னாசிமுத்து தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு புதிய துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை கவர்னருக்குப் பரிந்துரை செய்தது.
ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் நினைவு பெண்கள் கல்லூரியின் முதல்வர் கல்யாணி ஆனியை தமிழக கவர்னர் நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் தமிழக நிதியமைச்சர் அன்பழகனின் உறவினர்.
