தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் பழைய கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

இந்தியாவில் பழைய கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

இந்தியாவில் பழைய கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தல்


UPDATED : ஜன 24, 2009 12:00 AM

ADDED : ஜன 24, 2009 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2009 12:00 AM ADDED : ஜன 24, 2009 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக் கழகம், யோகி ராம்சுரத்குமார் ஆசிய கலாசார ஆய்வு மையம் சார்பில், பல்கலைக் கழக வளாகத்தில், இந்திய கலாசாரத்தில் காடுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த சொற்பொழிவு நடந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதியும் யோகி ராம்சுரத்குமார் ஆசிய கலாசார ஆய்வு மையத் தலைவருமான அருணாசலம் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவர் பேசும்போது, ‘காடுகளின் நன்மையை உணர்ந்து முன்னோர்கள் அவற்றை பாதுகாத்தனர். அரசர்கள் சாலையோரங்களில் மரங்களை நட்டனர். அரசர்கள், அமைச்சர்கள் அனைவரும் ராஜகுரு சொல்படி நன்மைகளை செய்தனர். இன்றைய உலக வாழ்க்கையில் யாரும் மரங்களை நடுவதில்லை. அவற்றை அழிக்கிறோம். பழங்காலத்தில் தேவர்கள், அசுரர்கள் இருந்தனர். கலியுகத்தில் அசுரர்கள் மட்டும் உள்ளனர். கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, இயற்கையை நம்ப வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரம நிர்வாகி விஜயலட்சுமி பேசியதாவது:
நமது கலாசாரத்தை மெக்காலே கல்வி முறை சீரழித்து விட்டது. மெக்காலே 1935 பிப்ரவரி 3ம் தேதி பிரிட்டீஷ் பார்லிமென்டில் பேசும் போது, இந்தியா முழுவதும் பயணம் செய்தேன், ஒரு பிச்சைக்காரரைக் கூட பார்க்க முடியவில்லை. திருடர்களைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் ஒழுக்கமாக உள்ளனர்.
எனவே, இந்தியாவை வெற்றி பெற வேண்டும் என்றால், இந்தியர்களின் கலாசாரத்தை சீரழிக்க வேண்டும். அதற்காக நான் அவர்களின் கல்வி முறையை மாற்றியுள்ளேன். புதிய கல்வி முறைப்படி கல்வி கற்கும் இந்தியர்கள் அவர்களை விட ஆங்கிலமும், வெளிநாட்டினரும் சிறந்தவர்கள் எனக் கருதுவர்.
அவர்களுடைய சுயத்தை இழந்து விடுவர் இதன் மூலம் அவர்களை நாம் எளிதில் அடக்க முடியும் எனக் கூறியுள்ளார். அதன்படி இன்று நமது முன் னோர்களின் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும். நமது பழைய கல்வி முறையைக் கொண்டு வர வேண்டும். நமது முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர்.
பண்டைய இலக்கியங்கள், காவியங்கள், வேதங்கள் ஆகியவற்றில் இயற்கை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தனர். சில வகையான மரங்கள் குறிப்பிட்ட கடவுள்களை குறிப்பிடுகின்றன. இன்றும் கோவில்களில் ஸ்தல விருட்ஷம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் இருப்பதைக் காணலாம். மகிழ மரம் அருணாசலேஸ் வரர் கோவில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதனைச் சுற்றி தளம் போடப்பட்டுள்ளது.
சிலர் அவ்வப்போது வந்து அந்த மரத்தின் பட்டைகளை நாட்டு மருந்துக்காக எடுத்து சென்றனர். இதனைக் கண்டு பகவான் யோகி ராம்சுரத்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதனை கோவில் நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தடுத்து நிறுத்தினார்.
மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. நன்கு வளர்ந்த மரம் ஒரு நாளைக்கு 1,800 கிலோ ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. 2,800 கிலோ கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்திக் கொள்கிறது.
மேலும், மரங்கள் மண் அரிப்பை தடுக்கிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது.  உலகம் வெப்பமயமானதற்கு காரணம் காடுகள் அழிக்கப்பட்டது. நம் கலாசாரத்துடன் இணைந்த காடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விஜயலட்சுமி பேசினார்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக் கழக விரிவுரையாளர் நாராய்ஜீஜா, நமது முன்னோர் களின் கலாசாரம் எவ்வாறு இருந்தது, அவர்கள் எவ்வாறு கல்வி கற்றனர். வேதங்களில் காடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
பல்கலைக்கழக சமஸ்கிருத விரிவுரையாளர் தேவஜோதிஜனா வரவேற்றார். பதிவாளர் விஷ்ணுபோத்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us