தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்

கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்

கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலுப்பூர்: கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வராமல் அங்கன்வாடி மையம் பூட்டியே கிடக்கிறது.

கடம்பத்துார் ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகள், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பழுதடைந்த கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us