தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள் - ஆசிரியர், மாணவர்களிடையே குழப்பம்

ஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள் - ஆசிரியர், மாணவர்களிடையே குழப்பம்

ஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள் - ஆசிரியர், மாணவர்களிடையே குழப்பம்


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: ஒரே பள்ளிக்கு, இரண்டு தலைமை ஆசிரியர்கள் பணிபுரிவதால், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மணிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக, அமுதா என்பவர் உள்ளார். தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், கடந்த, 20ம் தேதி நடந்தது.
இதில், மணிமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் அமுதாவும் கலந்து கொண்டார். அப்போது, எந்த பள்ளியையும், தலைமை ஆசிரியை அமுதா தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில், அவர், செம்மஞ்சேரி அரசு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், புத்திரன்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த விஜயகுமார், மணிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பணி ஆணை பெற்ற விஜயகுமார், கடந்த மாதம், 26ம் தேதி, மணிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் அமுதா, தலைமை ஆசிரியர் பணியில் இருந்து விலகவில்லை.

கடந்த, 27ம் தேதி, ஒரே பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பழைய பள்ளிக்கு செல்ல முடியாமல், புதிய பள்ளியில் பணியை தொடர முடியாமல், விஜயகுமார் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "கல்வித்துறை இயக்குனர் நேரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். இதற்கும், மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us