அரசு பொறியியல் கல்லுாரியில் லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்
அரசு பொறியியல் கல்லுாரியில் லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்
UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM
ADDED : ஜூலை 03, 2014 11:54 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்குகிறது.
காலை 9.30 மணிக்கு துவங்கும் முதல் பிரிவு கவுன்சிலிங்கில் இ.சி.இ., தரவரிசை பட்டியலில் 97.286 முதல் 82.214 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த 76 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
11.00 மணிக்கு இ.இ.இ.,மாணவர்ளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில், 99.071 முதல் 59.833 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
12.00 மணிக்கு நடக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கவுன்சிலிங்கில் 95.214 முதல் 59.417 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களும், பிற்பகல் 2.00 மணிக்கு நடக்கும் ஐ.டி., கவுன்சிலிங்கில் 83.929 முதல் 61.667 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களும் பங்கின்றனர். 2.30 மணிக்கு இ அண்ட் ஐ., 3.00 மணிக்கு ஐ.சி., 3.30 மணிக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், தி கன்வீனர், சென்டாக், புதுச்சேரி என்ற பெயருக்கு 850 ரூபாய்க்கான டி.டி.,யை புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து வர வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் 350 ரூபாய்க்கு எடுத்தால் போதுமானது. மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் உள்பட அனைத்து அசல் சான்றிழ்களை கொண்டு வரவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
