தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நன்றாக யோகா அறிந்தவர்களைக் கொண்டு பயிற்சியளிக்க ஆலோசனை

நன்றாக யோகா அறிந்தவர்களைக் கொண்டு பயிற்சியளிக்க ஆலோசனை

நன்றாக யோகா அறிந்தவர்களைக் கொண்டு பயிற்சியளிக்க ஆலோசனை


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: யோகா கலை அறிந்தவர்களால் மட்டுமே முறையான முழுமையான யோக பயிற்சி அளிக்க முடியும்; அரசுப் பள்ளிகளில் யோக கலை அறிந்தவர்களைக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதால், திட்டம் முறையாக செயல்பாட்டிற்கு வரும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டு முதல் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கலை கற்பிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு இடைவேளை நேரத்தில், அரைமணி நேரத்தில் சூரிய நமஸ்காரம், பத்மாசனம் உள்ளிட்ட ஆசனங்களை பள்ளி ஆசிரியர்களே மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். யோகாசனம் போன்ற கலைகளை முறையாக பயின்றவர்கள் மட்டுமே சிறந்த பயிற்சியளிக்க முடியும்.

பெரும்பாலான பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தாலும், முறையாக அப்பயிற்சி குறித்து அறியாததாலும், மாணவர்களுக்கு யோகா பயிற்சியளிப்பதே இல்லை. யோக கலை அறிந்த வல்லுனர்களைக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை, சுற்றுப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த கல்வியாண்டு முதல் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவித்தது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இருப்பினும், ஆசிரியர்கள் யோக கலை குறித்து முழுமையாக அறியாததால் மாணவர்களுக்கு, தியானம் உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளையும் மட்டுமே கற்பித்துள்ளனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி முழுமையாக பயனுள்ளதாக இருக்க யோக கலை அறிந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்வியாளர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வியாளர்கள் கூறுகையில், "யோகா பயிற்சி அளிக்கும் போது மாணவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். எளிதான பயிற்சிகளையும் முறைப்படி செய்யாவிட்டால் அவை குழந்தைகளின் எலும்புகளை பாதிக்கும். மேலும், பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு போதிய நேரம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களாளல் யோகா போன்ற சிறந்த பயிற்சிகளை முறையாக கற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. யோகா பயிற்சியால் பள்ளி குழந்தைகள் முழுமையாக பயன்பெற யோகா கலை அறிந்தவர்களைக் கொண்டு வகுப்பு கள் நடத்த அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us