தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணி மாறுதல் கலந்தாய்வில் ஒருவருக்கு மட்டும் பணி ஆணை

பணி மாறுதல் கலந்தாய்வில் ஒருவருக்கு மட்டும் பணி ஆணை

பணி மாறுதல் கலந்தாய்வில் ஒருவருக்கு மட்டும் பணி ஆணை


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வில், ஒருவருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது.

அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2014-15 கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு, பணிநிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள, துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாற்றம் குறித்த, ஆன்-லைன் கலந்தாய்வு நடந்தது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 23 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 4 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 1 ஆசிரியர் சிவகங்கை மாவட்டத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். மற்ற, 18 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பமில்லை என தெரிவித்தனர். பணி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியருக்கு, சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஆன்-லைனில் பணிநியமன ஆணையை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us