தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நம்பிக்கையே துணை: சிகரத்திலிருந்து விழுந்து தப்பிய இளைஞர்

நம்பிக்கையே துணை: சிகரத்திலிருந்து விழுந்து தப்பிய இளைஞர்

நம்பிக்கையே துணை: சிகரத்திலிருந்து விழுந்து தப்பிய இளைஞர்


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் இளைஞர் சஞ்சய் ராதாகிருஷ்ணா, 26, என்பவர் கம்போடியா நாட்டின் மலை சிகரம் ஒன்றின் உச்சியிலிருந்து தடுமாறி விழுந்து, எளிதில் வெளியேற முடியாத பள்ளத்தாக்கில் சிக்கி, ஒரு வாரம் போராடி உயிருடன் மீண்டு வந்துள்ளார்.

உயர்ந்த மலை ஆசிரியராக இருக்கும் ராதாகிருஷ்ணாவுக்கு மலையேற்றம் பிடித்தமான பொழுதுபோக்கு. பல நாடுகளில் 40க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறியுள்ள இவர் கடந்த வாரம் கம்போடியா நாட்டின் உயர்ந்த மலையான நாம் ஆறல் மீது ஏறினார்.

அப்போது நிலை தடுமாறி பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்த அவர், அதல பாதாளத்தில் ஒரு நாள் முழுவதும் உணர்வற்று கிடந்தார். அதன் பின் தானாக எழுந்து நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளை கடந்து, ஆறு நாட்களாக நடந்து கடந்த ஞாயிறு அன்று கிராமம் ஒன்றை அடைந்தார்.

இந்த ஒரு வார காலத்தில் அவரை காட்டில் உள்ள அட்டைப்பூச்சிகள் கடித்து உடல் ரத்தத்தை உறிஞ்சின. பாம்புகளுடன் போராடி கடியில் இருந்து தப்பியுள்ளார். ஆடைகள் கிழிந்து உடல் முழுவதும் காயங்களுடன் கிராமம் ஒன்றை கண்ட அந்த இளைஞர், அங்கிருந்த காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார்.

கையில் வைத்திருந்த மொபைல் போனில் சார்ஜ் ஏற்றிய பின் அதைப் பார்த்தால், அவரை தேடி 300க்கும் மேற்பட்டோர் எஸ்.எம்.எஸ். செய்திருப்பது தெரிய வந்தது. நாம் ஆறல் மலை சிகரத்திலிருந்து விழுந்தால் யாருமே பிழைக்க முடியாது என கருதப்பட்ட நிலையில் உயிர் பிழைத்த ராதாகிருஷ்ணா, தான்சானியா நாட்டின் கிளிமஞ்சாரோ மலை மீது அடுத்த வாரம் ஏறப் போவதாக அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us