தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு விழா: அமைச்சர் சுந்தரராஜ்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு விழா: அமைச்சர் சுந்தரராஜ்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு விழா: அமைச்சர் சுந்தரராஜ்


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றின் விவரம்

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில், 67 லட்சம் ரூபாய் செலவில், தடகள விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்திக் கொள்ள, ஒரு படகு, 20 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு போட்டி ரப்பர் படகுகள், 40 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

* தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான, சிலம்பம், உறியடி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கிளியாந்தட்டு, பல்லாங்குழி, கில்லி, நொண்டி, பம்பரம், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை மேம்படுத்த, நான்கு மாவட்டங்களில், பாரம்பரிய விளையாட்டுகளுக்கான விழா நடத்தப்படும். இவ்விளையாட்டுகளை பாதுகாத்து உயர்த்தவும், ஆவணப்படுத்தவும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும், மாநில விளையாட்டு உதவும் மையத்தில், மருத்துவக் கருவிகள் வாங்க, 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்திற்கு, 45 லட்சம் ரூபாய் செலவில், நாற்காலிகள், இரும்பு கட்டில்கள், மேஜைகள் வாங்கப்படும்.

* விளையாட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமி, மதுரை அடுத்த இடையப்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. இங்கு, சூரிய சக்தி கலன், 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us