UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 10:56 AM
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் மறியலுக்கு முயன்றனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஸ்ரீராம் நகர், புஷ்பராணிநகர், காட்ரோடு, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி கிராமங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் இப்பள்ளி தலைமை ஆசிரியையாக மேனகா இருந்து வருகிறார். இவருக்கும் ஆசிரியர்களுக்கும் ஈகோ பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு கொடைக்கானல்- வத்தலக்குண்டு ரோட்டில் ரோடு மறியல் செய்ய முயன்றனர்.
அப்போது பெற்றோர் மாணவர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்த போது தலைமை ஆசிரியை இல்லை. தேனிக்கு மீட்டிங் சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதனால் பெற்றோர் கலைந்து சென்றனர்.
