மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சி.இ.டி. தேர்வு
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சி.இ.டி. தேர்வு
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 10:55 AM
பெங்களூரு: "இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட தொழிற்கல்வி தொடர்பான படிப்புகளுக்கு அட்மிஷன் பெற ஒரே மாதிரியான சி.இ.டி. தேர்வு நடைமுறையை அடுத்தாண்டிலிருந்து செயல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது" என்று உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
சட்டசபையில் கல்வித் துறை கோரிக்கை தொடர்பாக நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் தேஷ்பாண்டே கூறியதாவது: தற்போது தொழில்நுட்ப படிப்புகளுக்கு அட்மிஷன் பெற அரசு "சி.இ.டி.," "காமட்-கே" தேர்வுகளை நடத்துகிறது. இதனால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
தொழிற்கல்வி அட்மிஷனுக்கு தொடர்புடைய 2006ன் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒரே மாதிரியான சி.இ.டி. தேர்வை அமல்படுத்துவது தொடர்பாக சட்டத்துறையுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிஜாப்பூரிலுள்ள பெண்கள் பல்கலைக்கழக எல்லையில் 13 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறது. இத்துடன் மாண்டியாவில் பெண்கள் மையம் ஒன்றையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் பற்றி ஆய்வு செய்ய உள்ளூருவை சேர்ந்த விசாரணை கமிட்டியுடன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும். பல்கலைக்கழகத்தின் விசாரணை கமிட்டி மட்டுமே பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று உத்தர விடப்படும்.
பல்கலைக்கழங்களில் காலியாகவுள்ள பதவிகளை நிரப்ப தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
