தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் உயர் நிலையை அடைவதற்காகவே கல்வி விழாக்கள்

மாணவர்கள் உயர் நிலையை அடைவதற்காகவே கல்வி விழாக்கள்

மாணவர்கள் உயர் நிலையை அடைவதற்காகவே கல்வி விழாக்கள்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: "மாணவர்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு உயர்நிலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக தான் கல்வி விழாக்கள் நடக்கிறது" என முதன்மை கல்வி அதிகாரி ஜெயகுமார் கூறினார்.

ராஜபாளையத்தில் பொன்னுச்சாமி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடந்த பரிசளிப்புவிழாவில் அவர் பேசுகையில், "பூத உடல் மறையும், புகழ் உடல் மறையாது என்பது திருவள்ளுவரின் வாக்கு. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விருதுநகருக்கு தனி இடம் உண்டு. அறிவு, புத்தகம் படிப்பதை தாண்டி உயர்ந்த மனிதராக ஒழுக்கம், பண்பு, நல்ல குணம் தேவை.

மேடை அமைத்து அதில் தலைமை ஆசிரியர்கள் உட்கார்ந்து மற்றவர்கள் கீழே உட்கார்ந்திருக்க கல்வி விழாக்கள் நடக்கும். இது ஒரு நிலையில் இருந்து மற்றொரு உயர்நிலைக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக தான்" என்றார்.

பார்வை இழந்தவர் சாதனை

மாவட்ட முன்னாள் நீதிபதி ஆர்.பொன்னுச்சாமி பேசுகையில், "கிருஷ்ண பரமாத்மாவே குருகுலத்தில் படித்து உள்ளார். வியாசர் கூற விநாயகரே மகாபாரதம் எழுதியதாக இதிகாசங்கள் கூறுகிறது. மாதா, பிதா, குரு என நமது வாழ்வில் குருவிற்கென இடம் உள்ளது.

உலக தலைவர் லெனின் ஒரு கூட்டத்தில் பேசும்போது மாணவர்களை படியுங்கள், நன்றாக படியுங்கள் என கூறி உள்ளார். நமது முன்னாள் பிரதமர் நேரு விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்தபோது பல புத்தகம் படித்து, கடிதங்களை எழுதி உள்ளார். மாற்றுதிறனாளியான சுஜாதா பார்வை இழந்தவர் முயற்சியால் 2011ல் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வாகினார். மாணவர்கள் நன்றாக படிக்கவேண்டும்" என்றார்.

பரிசு

எஸ்.எஸ். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி விஷ்ணுதாஸ், தலைமை ஆசிரியர்கள் குமாரசாமி, சர்வேஸ்வரன், தலைமை ஆசிரியை வித்யா ரஞ்சினி, ஜமீன்தார் துரை ராஜசேகர், தொழிலதிபர் தசரத ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். ஓய்வு தலைமை ஆசிரியர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us