தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாழை வளர்ப்பு குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி

வாழை வளர்ப்பு குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி

வாழை வளர்ப்பு குறித்து கல்லூரி மாணவிகள் பயிற்சி


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் காமாட்சிபுரம் சென்டெக்ட் அறிவியல் மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நபார்டு வங்கி நிதிஉதவியுடன் வாழை விவசாயிகளுக்கு மூன்று நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் மாணவிகள் பங்கேற்று தேனி மாவட்டத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் வாழைத் தோட்டங்களுக்கு சென்றனர்.

அங்கு வாழை விவசாயிகளுக்கு தண்டுக்கூன் வண்டு மற்றும் வெடிவாழை பிரச்னைகளுக்கு ஏற்ற கட்டுப்பாடு முறைகளை செயல்முறை விளக்கத்தை தோட்டக்கலை மாணவிகள் புவனா, சாவித்திரி, திவ்யபாரதி, கலையரசி, ஸ்ரீநிவி, இலக்கியா, சுமதி, பிரியங்கா, பவித்ரா, இந்துமதி, கோமதி, சாந்தகுமாரி, வினோதா ஆகியோர் பங்கேற்று அளித்தனர்.

ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்திரசேகரன், விஜயமுருகன், சுருளி ஆண்டவர், ஜோதிலிங்கம், சித்ரா செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us