தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லையில் புத்தகத் திருவிழா: ரூ 1.5 கோடி விற்பனை இலக்கு

நெல்லையில் புத்தகத் திருவிழா: ரூ 1.5 கோடி விற்பனை இலக்கு

நெல்லையில் புத்தகத் திருவிழா: ரூ 1.5 கோடி விற்பனை இலக்கு


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நெல்லையில் பத்து நாட்கள் நடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று காலை துவங்கியது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மாவட்ட கலெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, டி.சி. புக்ஸ், அமர்சித்ரா உள்ளிட்ட100க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், இலக்கியம், சமையல், ஆன்மிகம், மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

வரும் 27ம் தேதி வரையிலம் தினமும் காலை 11 மணி துவங்கி மாலை வரையிலும் ஐந்தாயிரம் மாணவ மாணவிகளை புத்தக கண்காட்சியை காண அரசு சார்பில் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மாலையில் பொதுமக்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வீதம் ஒரு லட்சம் பேரை புத்தக திருவிழாவிற்கு பார்வையிடச் செய்யவும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் தமிழக பொறுப்பாளர் மதன்ராஜ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us