தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் "பெருந்தலைவர் காமராஜர்" சினிமாவுக்கு கட்டணம் வசூல்

பள்ளிகளில் "பெருந்தலைவர் காமராஜர்" சினிமாவுக்கு கட்டணம் வசூல்

பள்ளிகளில் "பெருந்தலைவர் காமராஜர்" சினிமாவுக்கு கட்டணம் வசூல்


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஏழை மாணவர்களின் அடிப்படை கல்விக்கு அச்சாரமிட்ட காமராஜரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான சினிமா பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் பிறந்த நாளையொட்டி "பெருந்தலைவர் காமராஜர்" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட சினிமாவை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க கல்வித் துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பள்ளி மாணவர்களிடம் தலா ரூ.10ம், கல்லூரி மாணவர்களிடம் தலா ரூ.20ம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற மாணவர்களுக்கு தியேட்டர்களிலும், கிராமப்புற மாணவர்களுக்கு மினி புரஜெக்டர் மூலம் வகுப்பறையிலும் 10.6.2014 முதல் 31.3.2015 வரை காலை 9:30 மணிக்காட்சியாக இந்த சினிமாவை திரையிட மாவட்ட கலெக்டர்கள் பலருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "இந்த சினிமாவை பார்க்க மாணவர்களை தக்க பாதுகாப்புடன் தியேட்டருக்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும். மாணவர்களிடம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தை குணசேகரனிடம் (குழந்தைகள் நல அமைப்பாளர், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்) ஒப்படைக்க வேண்டும். இந்த சினிமாவை திரையிட வேறு யாருக்கும் அனுமதி இல்லை. கிராமப்புறங்களில் மினி புரஜெக்டர்கள் மூலம் திரையிட ஏற்பாடு செய்யவேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குணசேகரன் கூறுகையில், "மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் திரையிட நான் அனுமதி பெற்றுள்ளேன். கல்வி இயக்குனர் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். டிக்கெட் கட்டணத்தை அரசு தான் நிர்ணயித்துள்ளது. புரஜெக்டர்களை வாடகைக்கு எடுத்து தான் திரையிடுவோம்" என்றார்.

எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து இன்றைய மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதற்காக மாணவர்களிடம் ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு ரூ.20 கட்டணம் என்பது கஷ்டமான விஷயம். டிக்கெட் விலையை குறைக்கலாம் அல்லது தமிழக அரசு முன்வந்து இலவசமாக இந்த சினிமாவை மாணவர்களுக்காக திரையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us