தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடி மையமாக மாறி வரும் பள்ளி வளாகம்

குடி மையமாக மாறி வரும் பள்ளி வளாகம்

குடி மையமாக மாறி வரும் பள்ளி வளாகம்


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஜவன்மால் ஜூக்ராஜ் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் சுற்றுச்சுவர் இல்லாததால் குடி மக்களின் குடி மையமாக மாறி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஜவன்மால் ஜூக்ராஜ் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தை சுற்றி காவலர் குடியிருப்பு வளாகம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஏராளமாக அமைந்துள்ளன.

பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பகுதிவாசிகள் பள்ளி வளாகத்தின் வழியாக சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தி சென்று வருகின்றனர். இதனால் பள்ளி வேலை நாட்களில் பெரிதும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும், பள்ளி வளாகத்தில் மது பிரியர்கள் மது அருந்துவதும், மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்வதும் வாடிக்கை ஆகி விட்டது. பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.

எனவே மாணவர்களின் நலன் முன்னிட்டு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து இரவு நேர காவலர் பணி அமர்த்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us