UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 11:44 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.என்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலை மாணவிகள் விலையில்லா லேப் டாப் கேட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் அறைக்கதவு மூடப்பட்டதால் ஆத்தரமடைந்த மாணவிகள் கோஷமிட்டனர்.
இப்பள்ளியில் கடந்த 17ம் தேதி கடந்தாண்டு பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. சுயநிதி பிரிவு மாணவிகளுக்கு லேப்டாப் கிடையாது என அறிவிக்கப்பட்டதால் மாணவிகள் அன்று காலை லேப்டாப் சாலை மறியல், முற்றுகையில் ஈடுபட்டனர். அன்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாலையில் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். பின் அங்கிருந்து நேராக பள்ளி வந்து தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாளை முறையிட்டனர். சமரசம் பேசியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் மாணவிகளை வெளியேற்றி ஊழியர்கள், தலைமை ஆசிரியை அறையின் கதவை அடைத்தனர். ஆத்திரமடைந்த மாணவிகளும், அவர்களது பெற்றோரும் தலைமை ஆசிரியருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு தாஸ், தலைமை ஆசிரியர் அறை சென்று ஆலோனை நடத்தினார். பின் மாணவிகளிடம், "சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தவுடன் லேப்டாப் வழங்கப்படும்" என கூறினார்.
சமாதானம் அடையாத மாணவிகளும், பெற்றோரும் ஒரு மணி நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர்.
