இளநிலை உதவியாளர் பணியிடம்: நேர்முக தேர்வுக்கு அழைப்பு
இளநிலை உதவியாளர் பணியிடம்: நேர்முக தேர்வுக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM
ADDED : ஜூலை 24, 2014 02:44 PM
தர்மபுரி: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நாளை நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2013-14ம் நடந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு நேரடி நியமனம் சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பணிநாடுனர்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 11.00 மணி நடக்கிறது.
இதில் தர்மபுரி மாவட்டத்தில் காலி பணியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டத்தில் பணியாற்ற விரும்புபவர்களுக்கும் வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு தர்மபுரி சி.இ.ஓ. அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கிறது.
இதில் பங்கேற்போருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, அசல் கல்விச்சான்றுகள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
