முதல்வர் கோப்பைக்கான மாவட்ட தடகள, குழுப் போட்டிகள்
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட தடகள, குழுப் போட்டிகள்
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 10:37 AM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட தடகள, குழுப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின.
ஹாக்கி மட்டும் வேறிடம்: தடகளம், நீச்சல், கால்பந்து உட்பட 10 வித போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. ஒரே நேரத்தில் ஐந்துவித தடகளப் போட்டிகள் நடந்ததால் டிராக் உட்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மதியத்திற்கு மேல் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்ட செயற்கை ஹாக்கி மைதானம் திறப்பு விழா காணாததால் போட்டிகள் நடத்தமுடியவில்லை. வேறுவழியின்றி மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் போட்டிகள் நடத்தப்பட்டன.
