UPDATED : ஜன 07, 2015 12:00 AM
ADDED : ஜன 07, 2015 11:10 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் எட்டிற்கும் மேற்பட்ட மினி பஸ்கள் உள்ளன. இவைகளில் ஒருசில பஸ்கள் எஸ்.பி.கே., பள்ளி ரோடு வழியாக வந்து செல்கின்றன. அந்த பகுதியிலே நிற்கின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இங்கு 2 மினி பஸ்கள் நிற்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்கள் பலர் விபத்துக்குள்ளாகின்றனர்.
இந்த வழியாக செல்வதற்குதான் அரசு அனுமதி, நிற்பதற்கு இல்லை. ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நின்று செல்ல வேண்டும் என கூறி, நேற்று காலை எஸ்.பி.கே., கல்வி குழும நிர்வாகிகள், பொதுமக்கள், எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும், பஸ்கள் இங்கு நிற்காது என உறுதி கூறியததை அடுத்து கலைந்து சென்றனர்.
