கல்வி நிலையங்களில் சுகாதாரம் காக்க மாணவர்கள் உறுதிமொழி!
கல்வி நிலையங்களில் சுகாதாரம் காக்க மாணவர்கள் உறுதிமொழி!
UPDATED : ஜன 13, 2015 12:00 AM
ADDED : ஜன 13, 2015 12:30 PM
ஊட்டி: கல்வி நிலையங்களில் சுகாதாரம் காக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப் பணி நடந்தது. கல்லூரியில் துவங்கிய நிகழ்ச்சிக்கு, கல்வியல் கல்லூரி தாளாளர் நோயல் தலைமை வகித்தார். மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலர் மோரிஸ் சாந்தாகுரூஸ், விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ரத்தன் டாடா சாலை வழியாக மாணவ, மாணவியர் ஊர்வலமாக வந்து, பஸ் ஸ்டாண்டில், சுகாதாரப் பணி மேற்கொண்டனர்.
அங்கிருந்த குப்பை, கூளங்களை அகற்றி, வீதிகளில் குப்பைகளை வீசியெறிக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். ஊட்டி அரசு கலைக் கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி, புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள், பெத்லகம் பள்ளி மாணவியர் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின், "தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சுகாதாரம் காப்போம்" என்ற உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர்.
