தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காப்பு கலை பயிற்சி பெற பெண்கள் ஆர்வம்

தற்காப்பு கலை பயிற்சி பெற பெண்கள் ஆர்வம்

தற்காப்பு கலை பயிற்சி பெற பெண்கள் ஆர்வம்


UPDATED : பிப் 03, 2015 12:00 AM

ADDED : பிப் 03, 2015 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2015 12:00 AM ADDED : பிப் 03, 2015 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல்படுத்தப்படும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி பெற பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊராட்சி அளவில் நடத்தப்படும் இப்பயிற்சிகளில் குழுவிற்கு 30 பேர் வீதம் 12 மணி நேரம் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஜூடோ, கராத்தே நுணுக்கங்கள், பலவீனங்களை பலமாக மாற்றும் ஆற்றல், அபாயகரமான நிலையில் எதிராளியை கை, கால், ஆயுதங்களால் எதிர்கொள்ளும் திறன்களை பெறுவர்.

இத்திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவி குழுக்களின் கூட்டமைப்பு பெண்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 4174 ஊராட்சிகளைச் சேர்ந்த 41740 கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், ஊராட்சி கூட்டமைப்பைச் சேர்ந்த 30 ஆயிரத்து 96 நிர்வாகிகள் பயிற்சி பெறுவர்.

மதுரையில் டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, சேடபட்டி, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள் 1320, ஊராட்சி கூட்டமைப்பைச் சேர்ந்த 1452 நிர்வாகிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us