தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி

பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி

பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி


UPDATED : பிப் 03, 2015 12:00 AM

ADDED : பிப் 03, 2015 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2015 12:00 AM ADDED : பிப் 03, 2015 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்கு தாம்பரம்: பொறியியல் கல்லூரி விளையாட்டு போட்டிகளில், பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி சார்பில், 35வது, ’சாய் ராம் டைஸ் 2015’ பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பெண்கள் பிரிவு போட்டிகள் நிறைவடைந்தன. அதில், 532 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி போட்டிகளில், மேஜைபந்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், எஸ்.எஸ்.என்., கல்லூரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. அதில், செயின்ட் ஜோசப் கல்லூரி அணிக்கு, 10 புள்ளிகள் கிடைத்தன.

சதுரங்கத்தில், செயின்ட் ஜோசப் கல்லூரி அணி, 4-0 என்ற புள்ளிக்கணக்கில், மதுரை தியாகராஜா கல்லூரி அணியை வீழ்த்தியது. அதில், செயின்ட், ஜோசப்புக்கு 10 புள்ளிகள் கிடைத்தன. கபடி, வாலிபாலில் இரண்டாம் இடம் பிடித்து, தலா ஆறு புள்ளிகள் பெற்றது. கூடைபந்து, இறகுபந்து போட்டிகளில், மூன்றாம் இடத்தை பிடித்து, தலா இரண்டு புள்ளிகள் பெற்றது. இந்த போட்டிகளில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி, 38 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை, எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியும் பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us